Map Graph

தில்லி மான் பூங்கா

இந்தியாவின் தெற்கு தில்லியில் உள்ள ஒரு பூங்கா

மான் பூங்கா இந்தியாவின் தெற்கு தில்லியில் அமைந்துள்ளது. பிரபல சமூக சேவகர் ஆதித்யா நாத் ஜா நினைவாக இப்பூங்கா ஏ.என். ஜா. மான் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. நடைபயிற்சி, மெல்லோட்டம் மற்றும் வார இறுதி பயணங்களுக்கு பூங்கா பிரபலமானது. வாத்து பூங்கா, சுற்றுலாப் புள்ளி, முயல் அடைப்பிடங்கள் போன்ற பல துணைப்பிரிவுகள் மான் பூங்காவில் உள்ளன. இந்த பூங்காவில் முகலாய காலத்தின் வரலாற்று கல்லறைகள் உள்ளன. சஃப்தர்சங் சுற்றுப்புற எல்லை மற்றும் பசுமை பூங்கா, அவுசு காசுஸ் கிராமம் போன்ற இடங்களில் தொடங்கி பூங்காவை அணுகலாம். மான் பூங்கா மாவட்டப் பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ளதால் தில்லி வலைப்பந்து சங்கத்தின் பக்கத்திற்கு அருகிலுள்ள ஆர்.கே. புரத்திலிருந்தும் இதை அணுகலாம்.

Read article
படிமம்:Group_of_deer_in_the_deer_park.jpgபடிமம்:Peacock_at_deer_park.jpgபடிமம்:Hauz_Khas_Jheel.jpg